கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவின் கணவர் அத்துல சேனாநாயக்க தனது 64 வயதில் காலமானார்.

மறைந்த அத்துல சேனாநாயக்க , இம்முறை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கனிஷ்க சேனாநாயக்கவின் தந்தையும் ஆவார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரான ஸ்டன்லி சேனாநாயக்கவின் மகனான அத்துல சேனாநாயக்க, ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.