(கமலி)

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று மாலை அவிசாவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மீது கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோதியுள்ளது.

பயணிகளுக்கும் எவ்வித சேதமும் ஏற்படாத அதேவேளை விபத்தினால் அவிசாவளை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.