பொலன்னறுவை - அரலகங்வில பகுதியில், போகாஸ் சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில், மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பிற்பகல் 3.20 மணியளவில் தெயத்தகண்டியலிருந்து அரலகங்வில நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று மேலதிக வகுப்புக்காக வீதியில் பயணித்த மாணவர்கள் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் 4 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஏனைய 07 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 16 வயது மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM