(ஆர்.ராம்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக அக்கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் செல்வராஜா கஜேந்திரனின் பெயர் முன்மொழியப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் வெற்றிபெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
இந்த ஆசனத்தினை வன்னிக்கு, அல்லது கிழக்கு மாகாணத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு அப்பால் விரிவு படுத்துவதை அடிப்படையாக வைத்து கோரிக்கைகள் காணப்பட்டன.
எனினும் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கட்சியின் செயலாளரையே அந்த ஆசனத்திற்கு நியமிப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தன் மாணவர் ஒன்றியத் தலைவராக விளங்கிய செல்வராஜா கஜேந்திரன் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 77 என்றவாறான அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM