(ஆர்.ராம்)

இலங்கையின் ஆட்சி அதிகார வரலாற்றில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த அறுவர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினைச் சேர்ந்த அறுவரே இவ்வாறு ஆட்சி அதிகாரத்தில் இடம்பெறவுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைப் பொறுப்பினைப் பெற்றுள்ள நிலையில் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படவுள்ளார்.

இந்நிலையில் நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷவும் தெரிவாகியுள்ளனர். மொனராகலை மாவட்டத்திலிருந்து சஷீந்திர ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதோடு மாத்தறை மாவட்டத்திலிருந்து நிபுண ரணவக்க தெரிவாகியுள்ளார்.

மேலும் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டதில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதோடு சமல் ராஜபக்ஷவின் புதல்வாரன சஷீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி சகோதரியான சந்தானி ராஜபக்ஷவின் புதல்வாரன நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்தில் விருப்பு வாக்கில் முதலிடத்தினைப் பெற்று தெரிவாகியுள்ளார்.

இவர் இம்முறை தேர்தலிலேயே முதற்தடவையாக போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.