மாலாபே பகுதியில் வெளிநாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாலோபயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வெளிநாட்டுப் பெண் அளித்த முறைப்பாடுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கையானது இடம்பெற்றுள்ளது.

இதன்போது அத்துருகிரிய பொலிஸாரால் 30 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.