அம்பலங்கொட, ஆந்ததொல சந்தியில் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் மீட்க்கப்பட்ட அவர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அங்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹதொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.