ரம்புக்கன மற்றும் கடிகமுவ ரயில் நிலையத்தின் அருகே பயணித்த ரயிலில் விழுந்து நபரொருவர் தற்கொலைச் செய்து கொண்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் விழுந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த நபர் 50 இற்கும் 60 இற்கும் இடைப்பட்ட வயதுடைய நபரென்பது குறிப்பிடத்தக்கது. 

குறித்த தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் குறித்த நபரின் சடலமானது கடுகன்னாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.