அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் தனது இராணுவ இருப்பை நவம்பர் மாதத்திற்குள் சுமார் சுமார் 4,000 ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் நவம்பர் மாதத்திற்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது இராணுவத்தினரின் அளவை 5,000 க்கும் குறைவாகக் கொண்டுவரும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் சனிக்கிழமை பிற்பகுதியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது 8,600 அமெரிக்க இராணுவத்தினர் உள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரமே ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.