உலகம் முழுவதும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகளவில் ஆண்டுதோறும் தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

Nutrition Guide To Getting Pregnant While Breastfeeding ...

இதுதொடர்பாக வைத்தியர் ஸ்ரீதேவி கூறியதாவது....

'ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்து ஒரு மணி நேரத்திலிருந்து தாய்ப்பால் கொடுப்பது அவசியம். அதேபோல் குழந்தை பிறந்தது முதல் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே பிரதான உணவாக வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பாலுடன் மருத்துவர்களின் வழிகாட்டலுடன் வேறு வகையினதான திட மற்றும் திரவ உணவுகளை வழங்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுகிறது. அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்கும் அரணாகவும் தாய்ப்பால்தான் திகழ்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்தும் அதிகரித்து மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு தாய்மார்களும் பிறந்த குழந்தைக்கு தவறாமல் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.' என்றார்.