வவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்தமாதம் 30ஆம் திகதி வவுனியா அலகல்லு பகுதியில் வைத்து தங்கச்சங்கிலி ஒன்றை பறித்துக்கொண்டு  மோட்டார் சைக்கிளில் இருவர் தப்பிச் சென்றிருந்தனர்.

அது தொடர்பான முறைப்பாடு வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 20,23 வயதுடைய இருவரை நேற்று கைது செய்துள்ளதுடன், இதன் போது சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும், திருடப்பட்ட ஒன்றரை பவுண் தங்கச்சங்கிலியையும், மீட்டுள்ளனர். 

விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரையும் பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.