(இராஜதுரை ஹஷான்)

  இடம்பெற் று  முடிந்த பொதுத்தேர்தலில்  68 இலட்சத்து 53ஆயிரத்து  693  வாக்குகளை  பெற்று  அமோக வெற்றியீட்டிய   ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன  தனக்கு கிடைத்த 17  தேசிய பட்டியலுக்கான  உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளது.  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவின் செயலாளர்  சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இப் பெயர்பட்டியல்  கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று  முஸ்லிம்கள். ஒரு தமிழர் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  வடமாகாண   முன்னாள் ஆளுநர் கலாநிதி  சுரேன் ராகவன் ,  ஜனாதிபதி சட்டத்தரணி  மொஹமட் அலிசப்ரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  மொஹமட் முஸம்பில்,  வர்த்தகர்  மொஹமட் பலீல்  மர்ஜான்  ஆகியோரே  அந்த தேசிய  பட்டியலில் உள்ள தமிழ் முஸ்லிம்களாவர்  . இதனை விட  பேராசிரியர் ஜி. எல். பீறிஸ். மத்திய  வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்   கப்ரால்,  பேராசிரியர் திஸ்ஸ  விதாரன,  மேல்மாகாண முன்னாள் ஆளுநர்    வைத்தியர் சீதா அரம்பேபொல, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த கெடகொட, பேராசிரியர் சரித ஹேரத் உள்ளிட்டோரும்  கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசமும்  உள்ளடங்குகின்றனர்.

  நடந்து முடிந்த தேர்தலில் 59.09  சதவீத வாக்குகளை பெற்று   128  ஆசனங்களை  வெற்றிக் கொண்டதன் ஊடாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு  17 தேசிய  பட்டியல்   உறுப்பினர்களை  தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.  அதன்படி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனுப்பி வைத்துள்ள  தேசிய பட்டியல் உறுப்பினர்களின்  பெயர் விபரம் வருமாறு.

   பேராசிரியர் ஜி.  எல். பீறிஸ், சட்டத்தரணி சாகரகாரியவசம்,   மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்  கப்ரால்,   ஜனாதிபதி  சட்டத்தரணி  மொஹமட் அலி சப்ரி, ஜனாதிபதி  சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க , ஓய்வுப் பெற்ற ஆசிரிய ஆலோசகர் மஞ்சுளா திஸாநாயக்க,   சிரேஸ்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், சமூக செயற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில்   பேராசிரியர் திஸ்ஸ  விதாரண, பொறியியலாளர்  யதாமனிகுணவர்தன,  கலாநிதி சுரேன் ராகவன்,  மவ்பிம, சிலோன் டுடே  பத்திரிகை உரிமையாளர், வர்த்தகர்  டிரான் அலஸ், விசேட வைத்திய  நிபுணர்  மேல்மாகாண முன்னாள் ஆளுநர் சீதா அரம்பே பொல,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொட , வர்த்தகர் மொஹமட்  பலிலீல் மர்ஜான்