சீனாவின் வீவோ நிறுவனத்துடனான ஐ.பி.எல். விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) இரத்து செய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

It's official: BCCI, Vivo suspend IPL title sponsorship ties for ...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டைட்டில் ஸ்பொன்சராக வீவோ நிறுவனம் இருந்து வந்தது. இந்திய மற்றும் சீன எல்லையான லடாக் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்குப்பிறகு சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற இந்தியாவில் குரல் வலுத்தது .

ஆனால், ஐ.பி.எல். ஸ்பொன்சராக வீவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்தது. இதனால் நெட்டிசன்கள் கொதித்து எழுந்தனர். ஐபிஎல்-ஐ புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசியல் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் மறைமுகமாக எதிர்ப்பு கிளம்பின. இதனால் வீவோ டைட்டில் ஸ்பொன்சரில் இருந்து விலக முடிவு செய்தது.

இந்நிலையில் வீவோ மொபைல் இந்தியா பிரைவேட் நிறுவனமும், பிசிசிஐ-யும் இணைந்து ஐபிஎல் 2020 டைட்டில் ஸ்பொன்சரில் இருந்து வீவோ விலகிக்கொள்கிறது. 2020 தொடருக்கான டைட்டில் ஸ்பொன்சர் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.