(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா  பொதுஜன  பெரமுனவின் தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ  நாளைமறுதினம்  காலை 8.30   மணியளில்  களனி  ரஜமஹா  விகாரையில்  புதிய  பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  அதனை தொடர்ந்து திங்கட்கிழமை  கண்டி  வரலாற்று  சிறப்பு  மிக்க நகரில் அமைச்சரவைக்கான  அமைச்சு  பொறுப்புக்கள்   ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்படவுள்ளது. என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்    பொதுச்செயலாளர்   சாகர  காரியவசம்  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டு மக்கள்   ஸ்ரீ லங்கா   பொதுஜன  பெரமுனவின் மீது  நம்பிக்கை கொண்டு   தொடர்ந்து   ஆணையதிகாரத்தை    வழங்கி வருகிறார்கள்.  ஜனாதிபதி தேர்தலின் வெற்றி பொதுத்தேர்தலின் வெற்றியின் ஊடாக  முழுமைப் பெற்றுள்ளது.      ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பலமாக தோற்றுவித்துள்ள மக்களுக்கு    பொதுஜன பெரமுனவின்     செயலாளர் என்ற அடிப்படையில் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுவின்  தலைவர் மஹிந்த  ராஜபக்ஷ          நாளைமறுதினம்  காலை     களனி விகாரையில் மத  அனுஷ்ட்டானங்களில் ஈடுப்பட்டதன்  பின்னர் 9வது பாராளுமன்றத்தின்     பிரதமராக பதவியேற்கவுள்ளார்.  அதனை தொடர்ந்து    அமைச்சுக்களுக்கான      அமைச்சர்கள்  திங்கட்கிழமை  வரலாற்று  சிறப்பு மிக்க கண்டி நகரில் மத அனுஷ்டானங்களை   தொடர்ந்து   பதவிகளை பொறுப்பேற்கவுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான புதிய அரசாங்கத்தில்  தமிழ்- முஸ்லிம் என  சகோதர     இனத்தவர்களும்  பங்குக் கொள்வார்கள் இனவாதத்தை  அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் அரசாங்கம் செயற்படாது.  அனைத்து இன  மக்களும் சம  அளவில்  மதிக்கப்படுவார்கள்.   வடக்கு மாகாணத்தில்  மொட்டு சின்னம்   தமிழ் மக்களின்  ஆதரவில் வெற்றிக் கொண்டுள்ளது..    தமிழ் மக்களின்  அபிலாசைகளை    முரண்படாத விதத்தில் நிறைவேற்றுவோம்  நிறைவேற்றுவோம்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  சுபீட்சமான எதிர்கால கொள்கையை   5 வருட காலத்தில்   முழுமையாக  நிறைவேற்றுவோம்.  மாகாண சபை தேர்தலிலும்   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும். அரசியல் ரீதியில் இடம் பெற்ற தவறுகள் தொடர்ச்சியாக திருத்திக் கொள்ளப்படுகிறது. என்றார்.