(நா.தனுஜா)
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டிதைத் தொடர்ந்து உலகநாடுகளின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களின் ஊடாக வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
பொதுஜன பெரமுனவின் வெற்றி உறுதியானதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றிகூறி மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றைச் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நரேந்திர மோடி, 'உங்களுடன் பேசமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. மீண்டுமொரு முறை உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அனைத்துத்துறைகள் சார்ந்தும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேலும் வலுப்படுத்துவதுடன், இருநாட்டு நல்லுறவை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வோம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹிம் மொஹமட் சோலி
இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுக்கொண்டிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றி இலங்கை மக்கள் சுபீட்சத்தை அடைந்துகொள்வதற்கு வழிகோலும் என்றும், இலங்கை - மாலைதீவிற்கு இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்துவதற்கு உதவும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன் என்று மாலைதீவு ஜனாதிபதி இப்ரஹிம் மொஹமட் சோலி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி
வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்களுக்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது காண்பிக்கப்பட்ட வலுவான நம்பிக்கைக்காகவும் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். இனிவரும் காலங்களின் இலங்கையுடனான இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கு பாகிஸ்தான் எதிர்பார்த்திருக்கிறது என்று பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி பதிவிட்டிருக்கிறார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்
இலங்கை மக்களுக்கும் பாராளுமன்றத்திற்குத் தெரிவான அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துக்கள். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அதனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM