முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கட்சியின் தலைவரான மு. க . ஸ்டாலின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கொரோனாத் தொற்றுக்கு எதிராக போராடிய முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதன்போது திமுகவின் முன்னணி நிர்வாகிகளான துரைமுருகன், டி ஆர் பாலு, மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஆ ராசா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர்.