மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சிவனேசன்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முதலிடத்தில் உள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 54,198 வாக்குகளை பெற்று, தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

சானக்கியா ராகுல் ராஜபுத்திரன் - 33,332 (ITAK) 

கோவிந்தன் கருணாகரம் - 26,382 (ITAK)

அஹமட் நஸீர் - 17,599 (SLMC)

சதாசிவம் வியாழேந்திரன் - 22,218 (SLPP)