யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அங்கஜன் ராமநாதன் முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 36,365 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு ஆசனத்தை தக்க வைத்துள்ளது.

இது தவிர யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏனைய ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்கள் விபரம்:

சிவஞானம் சிறிதரன் 35,884 (ITAK)

டக்ளஸ் தேவானந்தா 32,146 (EPDP)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31,658 (AITC)

எம்.ஏ.சுமநதிரன் 27,834 (ITAK)

த.சித்தார்த்தன் 23,840 (ITAK)

சி.வி. விக்னேஸ்வரன் 21,554 (TMTK)