இரத்தினபுரி மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ர வன்னியாராச்சி முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிட்ட அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் மொத்தமாக 446,668 வாக்குகளை (68.86%) பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்த மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக 08 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 03 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஹேசான் விதானகே அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்றுள்ளார் (60,426).