மாதம்பே - தோப்புவ வீதியில் நாத்தாண்டிய - மாவில பிரதேசத்தில் மின் இணைப்புகள் மீது மரங்கள் சில முறிந்து விழுந்தமையினால் மின் கம்பங்கள் 8 சேதமடைந்துள்ளன.

குறித்த பிரதேசத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்புகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின் காரணமாக அப்பிரதேச மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மரங்கள் முறிந்து விழுந்தமையினால் மாதப்பே - தோப்புவ வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.