வட மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றிக்கொண்டுள்ளது. அக்கட்சியானது 69 ஆயிரத்து 916 வாக்குகளை வன்னி மாவட்டத்தில் பெற்றுள்ளது. 

இது 33.64 சத வீதமாகும்.  அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 42 ஆயிரத்து 524 வாக்குகளையும்,  ஐக்கிய மக்கள் சக்தி 37 ஆயிரத்து 883 வாக்குகளையும் (18.23 சதவீதம்), ஈ.பி.டி.பி. கட்சியினர் 11 ஆயிரத்து 310 வாக்குகளையும் (5.44 சதவீதம்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லை தீவு ஆகிய தேர்தல் தொகுதிகளையும் வன்னி மாவட்ட தபால் மூல வக்களிப்பிலும் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. எனினும் வன்னி மாவட்ட இடம்பெயர்ந்தோர்  தொடர்பிலான வக்களிப்பில், ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. எவ்வாறாயினும் முழு மாவட்ட ரீதியிலான பார்வையில் வன்னி மாவட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனதாக்கியுள்ளது.