நாட்டின் பல மாகாணங்களுக்கான தேர்தல் முடிவு!

By Vishnu

07 Aug, 2020 | 12:15 AM
image

தென் மாகாணம்

மாத்தறை மாவட்டம்:

மாத்தறை மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 3 இலட்சத்து 52 ஆயிரத்து 217 வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தை வெற்றிக்கொண்டுள்ளது. 

அம்மாவட்டத்தில் உள்ள தெனியாய, ஹக்மன, அகுரஸ்ஸ,   கம்புறுபிட்டிய, தெவிநுவர, மாத்தறை, வெலிகம ஆகிய 7 தேர்தல் தொகுதிகளையும் வெற்றிக்கொண்டுள்ள அந்த கட்சி,  அம் மாவட்டத்தில் அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்ப்ட்ட வாக்குகளில் 73.63 வீதமான வாக்குகளை தனதாக்கிக்கொண்டுள்ளது. 

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 72 ஆயிரத்து 740 வாக்குகளையும் ( 15.22 வீதம்) , தேசிய மக்கள் சக்தி 37 ஆயிரத்து 136 ( 7.75 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 7 ஆயிரத்து 631 வாக்குகளையும் ( 1.60 வீதம்) பெற்றுக்கொண்டுள்ளன. அ

தன்படி அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு ஒரு ஆசனும்  கிடைத்துள்ளன.

 காலி மாவட்டம்:

 காலி மாவட்டத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிக்கொண்டுள்ளது. பலப்பிடிய, அக்மீமன, பத்தேகம,பெந்தர,   காலி,  ஹபராதுவ,  ஹினிதும, கரந்தெனிய, ரிதிகம, அம்பலாங்கொட ஆகிய அம்மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும்  வெற்றிக்கொண்டு மாவட்டத்தின் வெற்றியை உறுதி செய்துள்ள அக்கட்சி, மொத்தமாக 4 இலட்சத்து 30 ஆயிரத்து 334 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. இது, அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 70.54 வீதமாகும்.  

இதற்கு அடுத்தபடியாக  ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 456 வாக்குகளையும் ( 18.93 வீதம்),தேசிய மக்கள் சக்தி 29 ஆயிரத்து 963 வாக்குகளையும் ( 4.91 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 18 ஆயிரத்து 968 வாக்குகளையும் ( 3.11) பெற்றுக்கொண்டுள்ளன. அதன்படி,  காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுக்கு 7 ஆசங்களும்  ஐக்கிய மக்கள் சக்திக்கு 2 ஆசங்களும் உரித்தாகியுள்ளன. 

அம்பாந்தோட்டை:

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் வெற்றிகொண்டு தனது அடஹிக்கத்தை ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன நிலை நிறுத்தியுள்ளது. அம்மாவட்டத்தின் தங்காலை, பெலியத்தை, முல்கிரிகல, திஸ்ஸமஹராம ஆகிய  தேர்தல் தொகுதிகளை வெற்றிகொண்டுள்ள அந்த கட்சி பெற்றுக்கொண்டுள்ள மொத்த வாக்குகள் 2 இலட்சத்து 80 ஆயிரத்து 881 ஆகும். அது 75.10 சதவீதமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தி  51 ஆயிரத்து 758  வாக்குகளையும் (13.84 வீதம்), தேசிய மக்கள் சக்தி 31 ஆயிரத்து 362 வாக்குகளையும் ( 8.39 வீதம்), ஐக்கிய தேசிய கட்சி 5 ஆயிரத்து 17 வாக்குகளையும் (1.34 சதவீதம்) பெற்றுக்கொண்டுள்ளன. 

ஊவா மாகாணம்

மொனராகலை மாவட்டம்:

மொனராகலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்கு மூன்று தேர்தல் தொகுதிகளே உள்ள நிலையில் அம்மூன்று தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கைப்பற்றி மாவட்டத்தை வெற்றிக்கொண்டுள்ளது.

பிபில, வெல்லவாய, மொனராகலை ஆகிய தேர்தல் தொகுதிகள் மூன்றினையும் வெற்றிக்கொன்டு முழு மாவட்டத்திலும் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அம்மாவட்டத்தில்  2 இலட்சத்து 8 ஆயிரத்து 193 வாக்குகளைப் பெற்றுள்ளது. அது, அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 74.12 வீதமாகும்.  

அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி அம்மாவட்டத்தில் 54 ஆயிரத்து 147 வாக்குகளையும் ( 19.28 வீதம்), தேசிய மக்கள் சக்தி 11 ஆயிரத்து 429 வாக்குகளையும் (4.07 வீதம்), ஐக்கிய  தேசிய கட்சி 3 ஆயிரத்து 494 வாக்குகளையும் ( 1.24 வீதம்) பெற்றுக்கொன்டுள்ளன. அதன்படி ஸ்ரீ லங்க பொது ஜன பெரமுனவுக்கு அம்மாவட்டத்தில் 4 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் உரித்தாகியுள்ளன. 

பதுளை மாவட்டம்:

பதுளை மாவட்டத்தை பொருத்தவரை, 9 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. மஹியங்களை, வியலுவ, பசறை, பதுளை,  ஊவா - பரணகம, வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை, ஹாலி எல ஆகிய  அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது.

 அம்மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 3 இலட்சத்து 9 ஆயிரத்து 538 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் அது அளிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகளில் 62.06 சதவீதமாகும். 

அதற்கு அடுத்தப்டியாக, ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 290 வாக்குகளையும் ( 28.93 வீதம்), தேசிய மக்கள் சக்தி 19 ஆயிரத்து 308 வாக்குகளையும் ( 3.87 வீதம்),  ஐக்கிய தேசிய கட்சி 9 ஆயிரத்து 163 (2.03 வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளன.

வடமத்திய மாகாணம்

அனுராதபுரம் மாவட்டம்:

அனுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவபொத்தானை,  அநுராதபுரம்- கிழக்கு,  அநுராதபுரம்- மேற்கு, கலாவெல,  மிஹிந்தலை, கெகிராவ,  ஆகிய அனைத்து தேர்தல் பிரிவுகளிலும்  ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன  வெற்றி பெற்றுள்ளது. 

அந்த கட்சியானது மொத்தமாக 3 இலட்சத்து 44 ஆயிரத்து 458 வககுகளை அம்மாவட்டத்தில் 67.95 என்ற சதவீதத்தில் பெற்றுக்கொண்டுள்ளது. 

இதற்கு அடுத்தடியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 788 வாக்குகளையும் (23.63 சதவீதம்), தேசிய மக்கள் சக்தி 24 ஆயிரத்து 492 வாக்குகளியும் ( 4.83),  ஐக்கிய தேசிய கட்சி 8 ஆயிரத்து 254 வாக்குகளையும் ( 1.63 சத வீதம்) பெற்றுக்கொண்டுள்ளன.

பொலன்னறுவை :

பொலன்னறுவை மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன வெற்றிகொண்டுள்ளது. மின்னேரிய, மெதிரிகிரிய, பொலனறுவை, ஆகிய குறித்த மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளையும் வெற்றிகொண்டுள்ள ஸ்ரீ லங்க அபொது ஜன பெரமுன, மொத்தமாக ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 847 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 73.66 சதவீதமாகும்.  

இதற்கு அடுத்தடியாக அம்மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 47 ஆயிரத்து 781 வாக்குகளையும்(19.47 வீதம்), தேசிய மக்கள் சக்தி 6 ஆயிரத்து 792 வாக்குகளையும் (2.77 சதவீதம்), ஐக்கிய தேசிய கட்சி 6 ஆயிரத்து 525 (2.66 சதவீதம்)வாக்குகளையும்  பெற்றுக்கொண்டுள்ளன.அதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவுக்கு 4 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனமும் கிடைக்க பெற்றுள்ளன. 

மத்திய மாகாணம்

நுவரெலியா மாவட்டம்:

 நுவரெலியா மாவட்டத்திலும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் இம்முறை ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன வெற்றி கொண்டுள்ளது. மஸ்கெலியா,   ஹங்குரான்கத்தை,     கொத்மலை,  வலப்பனை,   நுவரெலியா ஆகிய  தேர்தல் தொகுதிகள் அனைத்தையும் வெற்றிகொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன, 54.47 எனும் சத வீதத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரத்து 389 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

அதற்கு அடுத்த படியாக ஐக்கிய மக்கள் சக்தி ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 8 வாக்குகளையும் ( 31.47 சத வீதம்),   சுயேட்சைக் குழு - 1  17 ஆயிரத்து 107 வாக்குகளையும் ( 4.04 சத வீதம் ), ஐக்கிய தேசிய் கட்சி 12 ஆயிரத்து 974 ( 3.07சதவீதம்) பெற்றுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோரப் பாதை ரயில் மார்க்கத்தின் சமிக்ஞை...

2022-11-28 10:26:40
news-image

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 3 புதிய...

2022-11-28 10:44:24
news-image

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் யாழில்...

2022-11-28 10:19:37
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09