தல 57இல் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

Published By: Robert

10 Jul, 2016 | 01:19 PM
image

அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் யார் என்பதை பார்ப்போம்.

அஜித் நடிக்கும் ‘தல57’ படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரன் இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கருணாகரன் தற்போது தனுஷுடன் ‘தொடரி’, விக்ரமுடன் ‘இருமுகன்’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

‘தல57’ படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவை கவனிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23
news-image

இளம் ரசிகர்களை உற்சாகமாக நடனமாட வைக்கும்...

2025-01-18 16:13:12
news-image

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் அப்டேட்

2025-01-18 16:12:54
news-image

பிரான்சில் வெளியாகும் 'பறவாதி' திரைப்படம்

2025-01-18 06:29:01
news-image

நடிகர் அப்புகுட்டி நடிக்கும் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள்'...

2025-01-17 15:33:58
news-image

பவன் கல்யாண் நடிக்கும் 'ஹர ஹர...

2025-01-17 15:32:15
news-image

வனிதா விஜயகுமார் நடிக்கும் மிஸஸ் &...

2025-01-17 15:31:55
news-image

சாதனை படைக்கும் அஜித் குமாரின் 'விடாமுயற்சி'...

2025-01-17 17:19:13
news-image

நடிகர் சூரி வெளியிட்ட 'டெலிவரி பாய்'...

2025-01-16 17:05:13
news-image

பார்த்திபன் வெளியிட்ட ' புரவியாட்டம் '...

2025-01-16 17:04:38