இதுவரை வெளியிடப்பட்டுள்ள 2020 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இந் நிலையில் இந்த வெற்றி குறித்து தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், 

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரித்துடன் ஒரு வலுவான பாராளுமன்றத்தை நிறுவ முடியும் என்று நான் நம்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.