(செ.தேன்மொழி)
ஹோமாகம - பிட்டிபன பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் இராணுவவீரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஹோமாகம - பிட்டிபன பகுதியில் பாதாள குழுவொன்றுக்கு சொந்தமான அதிகளவான துப்பாக்கிகள் கைப்பற்றப் பட்டிருந்தன. 

இதன்போது ரி 56 ரக துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினரே மேற்கொண்டு வந்ததுடன், இந்த துப்பாக்கி விவகாரம் தொடர்பில் இராணுவத் தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய  இராணுவத்தினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.