புற்றுநோய் பாதிப்புகளிலேயே கணைய புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது தான் இத்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானது. ஏனெனில் கணைய புற்றுநோய் பாதித்திருந்தால் அவர்களுக்கு கீமோதெரபி, இம்யூனோ தெரபி மற்றும் கன்வெனஷனல் கீமோ தெரபி போன்றவை பலனளிப்பதில்லை. அதாவது இவைகளால் கணையத்தில் ஏற்பட்டிருக்கும் புற்று நோய் கட்டிகளை அழிப்பதில் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் Focal Adhesion kinase inhibitor என்ற நவீன சிகிச்சையை கண்டறிந்து இதனை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள்.
கணையத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகளை வளரவிடாமல் தடுத்து அதனை சுற்றிலும் வேறொரு நார்த்திசுக்களை பதியமிட்டு அதனை வளர்த்தெடுப்பது தான் இந்த சிகிச்சையின் பிரதான நோக்கம்.
இம்மாதிரியான சிகிச்சையின் போது கணையத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகள் 7 சதம் வரை அழிந்து இருப்பதாக கண்டறியப்பட்டதால் இந்த சிகிச்சை வெற்றியடைந்திருப்பதாகவே கருதுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அத்துடன் இந்த சிகிச்சையின் போது தொடர்ந்து கீமோதெரபி, இம்யூனோ தெரபி ஆகிய சிகிச்சைகளையும் அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்
மேலும் இந்த 3 விதமான கூட்டு சிகிச்சையின் போது கணையத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகள் செயல்பாடற்ற தன்மையை அடைகின்றன. ஒரு சிலருக்கு அவை அழிந்துவிடுகின்றன. ஒருசிலருக்கு அச்செல்கள் தொடர்ந்து வளர்ச்சியடையாமல் தேக்க நிலையை அடைகின்றன. இவற்றில் எந்த நிலையை அடைந்தாலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி விரைவில் குணமடைவது உறுதி என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
டொகடர் ஜோசப் பிரான்ஸிஸ் டொமினிக் M.D.,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM