(எம்.மனோசித்ரா)

வாக்கெடுப்பு தினத்தில் மாத்திரம் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 1,053 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 288 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 765 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.

அதற்கமைய, இது வரையில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,566 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 7,091 முறைப்பாடுகளுமாக மொத்தமாக 8,657 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

சமூக ஊடகங்கள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற 5,236 முறைப்பாடுகளில் வர்த்தக விளம்பரங்கள் நூறு சத வீதமும் ஏனைய முறைப்பாடுகளில் 78 சத வீதமும் அகற்றுவதற்கு சமூக வலைத்தள நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.