பூநகரியில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பூநகரி பொலிஸார்  தெரிவிக்கின்றனர். 

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசபுரம் காட்டில் இருந்து  யாழ்ப்பாணம் கொண்டு செல்லும் போது வில்லடி பகுதியில் வைத்து பூநகரி பொலிஸாரால் இன்று எட்டு இலட்சம் ரூபா பெறுமதியாக மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பூநகரி பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த மரக்குற்றிகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இதன்போது சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.