தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் உடைக்கப்பட்ட விவகாரத்தில் குருணாகல் பிரதேச மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகர சபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவினை சட்டமா அதிபர் தபுல டிலிவேர பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பித்துள்ளார்.