இன்று நாடு பூராகவுமுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களத்தின் வானிலை ஆய்வாளரான மலிந்த வில்லன்கொட தெரிவித்தார்.