140,000 க்கும் அதிகமானோரை காவு கொண்ட ஹிரோஷிமா தாக்குதலின் 75 ஆவது ஆண்டு நாள் இன்று!

By Vishnu

06 Aug, 2020 | 11:19 AM
image

140,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஹிரோஷிமா தாக்குதலின் 75 ஆவது ஆண்டு நினைவு நாளில் சுயநல தேசியவாதத்தை நிராகரிக்குமாறு ஹிரோஷிமா மேயர் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் முதல் அணு குண்டுவெடிப்பின் 75 ஆவது ஆண்டு நிறைவேந்தல் நிகழ்வானது இன்று ஜப்பான், ஹிரோஷிமாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதன் நிகழ்வுகள் இந்த ஆண்டு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஹிரோஷிமா நகரத்தின் மேயர் நாடுகளை சுயநல தேசியவாதத்தை நிராகரிக்கவும், அணு ஆயுதக் குறைப்பில் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்துமாறும் அனைத்து நாடுகளிடமும் வேண்டிக் கொண்டார்.

1945 ஆகஸ்ட் இதே நாளில்தான் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. 

"லிட்டில் பாய்" என்று செல்லப்பெயர் கொண்ட இந்த அணுகுண்டு வீச்சினால் 1,18,661 பொது மக்கள் கொல்லப்பட்டதாக அந்த நேரத்தில் ஜப்பான் அறிவித்தது.

எனினும் ஹிரோஷிமாவில் வசித்த 3,50,000 பேரில் 1,40,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிந்தைய மதிப்பீடுகள் தெரிவித்தன. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலர் நீண்ட காலத்திற்கு நோய்வாய்ப்பட்டு இறந்தனர். பலர் உடல் ஊனமடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21