சுகாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த உதவிய பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தெரிவிக்கையில், 

இன்று (நேற்று) நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட 71% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கொவிட்-19 இன் ஆபத்து இன்னும் உலகத்திலிருந்து மறைந்துவிடாத நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதல் நாடு என்ற வகையில் எமது சுகாதார வழிகாட்டுதல்களில் நம்பிக்கை கொண்டு வாக்களித்த மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.