ஐக்கிய அரபு இராச்சியத்தின்  அஜ்மான் நகரின் புதிய தொழில்துறை பகுதியில் பொதுச் சந்தை தொகுதியொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.  

Ajman market fire, Ajman fire

அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில் இவ் தீ பரவல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் தீபரவலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதே வேளை, கோவிட் -19 தொற்று காரணமாக குறித்த சந்தைதொகுதி  பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.