(இராஜதுரை ஹஷான்)

பொதுத்தேர்தலை ஜனநாயக முறையிலும், பாதுகாப்பான முறையிலும் நடத்துவதற்கு   தேசிய தேர்தல்கள்  ஆணைக்குழு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு  வழங்கிய பொறுப்பினை முறையாக  நிறைவேற்றியுள்ளோம்.  தேர்தல்  இடம் பெற்ற தினத்தில்  அதிகமான தேர்தல்  முறைப்பாடுகள்  கொழும்பு மாவட்டத்திலும், குறைவாக  முறைப்பாடுகள்   மாத்தளை மாவட்டத்திலும்  பதிவாகியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் எவ்வித முறைப்பாடுகளும்   இடம்   பெறவில்லை  என   தேர்தல்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியான  சிரேஷ்ட  பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய    தெரிவித்தார்

    தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

  அவர்  மேலும் குறிப்பிடுகையில்,  

   9வது   பாராளுமன்றத்தை  தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல்  அமைதியான முறையில் இடம் பெற் று  முடிந்துள்ளன.    தேர்தல்  இடம்  பெற்ற   தினத்தில் மாத்திரம்  288 தேர்தல் முறைப்பாடுகள்  கிடைக்கப் பெற்றுள்ளன.  கொழும்பு   மாவட்டத்தில்  40 முறைப்பாடுகள்  கூடுதலாகவும்,   மாத்தளை மாவட்டத்தில் 2  முறைப்பாடுகளும் மாத்திரமே  பதிவாகியுள்ளன   மன்னால் மாவட்டத்தில் எவ்வித  முறைப்பாடுகளும்  இடம் பெறவிவ்லை.

      கொலை,  படுகாயம், மற்றும் தீ விபத்து என  பாரதூரமான சம்பவங்கள் ஏதும்   பதிவாகவில்லை.  215ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த பொதுத்தேர்தல்  சிறந்த முறையில்  இடம்  பெற்றுள்ளன. குருநாகலை , களனி மற்றும்  கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில்  இடம் பெற்ற  சம்பவங்கள்   வேட்பாளர்களை  மையப்படுத்தியதாக  அமைந்துள்ளது.      கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள்  தொடர்பில்  அரை மணித்தியாலத்துக்குள்  கவனம் செலுத்தப்பட்டு  உரிய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக 70000 ஆயிரம் சிவில் மற்றும் பாதுகாப்பு   தரப்பினர்   இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.  தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக  நிறைவுப் பெறும்  வரையில்  70 ஆயிரம் பாதுகாப்பு தரப்பினரும் சேவையில் ஈடுப்படுவார்கள். தேர்தல் தொடர்பில் எவ்வித அச்சமும்  கொள்ள வேணடாம். இந்த தேர்தல்     சிறந்ததொரு  எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றார்.