திகாமடுல்ல மாவட்டத்தில் 72 வீதமான வாக்குப் பதிவு - முழு விபரம் இதோ !

05 Aug, 2020 | 10:24 PM
image

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று(5)  புதன்கிழமை  மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றுள்ளது.

 5 மணிக்கு நிறைவு பெற்றதன் படி மாவட்டத்தின் வாக்களிப்பானது 72 .84 வீதமாக காணப்படுவதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி எம் எல் பண்டார நாயக்க தெரிவித்தார்.

 அம்பாரை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

 சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 525 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட் டிருந்தன.

 இந்த வாக்களிப்பு  நிலையங்களிலிருந்து வாக்கு பெட்டிகள் தற்போது அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றன.இங்கு கொண்டுவரப்படும் அனைத்து வாக்குப் பெட்டிகளும் முறையான வகையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன.

 இதற்கென மொத்தமாக 74 வாக்கெண்ணும் நிலையங்களில்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக  20 க்கும் அதிகமான அரசியல் கட்சிகளும்  பல சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி உள்ளன.மை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களாக 55ம் தபால் மூல வாக்குகள் எண்ணுதற்காக 19 நிலையங்களும் செய்யப்படும் இன்று திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் டி எம் எல் பண்டார நாயக்க தெரிவித்தார்.

 நாளை வியாழக்கிழமை(6)  காலை 8 மணி முதல் இந்த வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09