கிளிநொச்சியில் இம்முறை 71 வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் 2020 இன் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்த வாக்களிப்பு 71.52 வீதமாகும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சுமூகமாக இடம்பெற்ற வாக்களிப்பில் பதிவு செய்யப்பட்ட 92264 மொத்த வாக்காளர்களில் 65984 பேர் வாக்களித்துள்ளனர் என மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 107 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் பொலீஸ் பாதுகாப்புடன்  கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.