இந்தியாவின் மும்மை அருகே மிகப்பெரிய கொள்கலன் துறைமுகத்தில் இன்று புதன்கிழமை மூன்று கிரேன்கள் சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பகுதியில் வீசிய பலத்த் காற்றுக் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதிர்ஷ்டவசமாக சம்பவத்தின்போது எவரும் காயமடையவில்லை என்று துறைமுகத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.