9 ஆவது பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் 5 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

மாலை 2 மணியளவில் பல மாவட்டங்களில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு பாதுகாப்புடன் சற்றுநேரத்தில் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

இதேவேளை, தேர்தல் வன்முறைகள் பெரியளவில் பதிவாகாத நிலையிலும் சிறுசிறு வன்முறைச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தலை கண்காணிக்கும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.