நடைபெறுகின்ற பொது தேர்தலுக்காக, மறைந்த அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகனும், வேட்பாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது வாக்கு பதிவு செய்தார்.

இவர் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்தார்.