பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய தேர்தல் ஆணையகம் வாக்காளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற புகைப்படங்கள் மற்றும்  காணொளிகளை வெளியிடுவது தேர்தல் சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்த, ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா, தேர்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

வாக்காளர்கள் குறிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 4,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறுப்படுகிறது.