(க.கிஷாந்தன்)

பூண்டுலோயாவிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்று பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் பாலத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில் இதில் பயணித்த மூவரில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவயிடத்திலயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை விபத்திக்குள்ளாகி உயிரிழந்த சிறுவன் பி.பிரகலாதன் வயது 13 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.