(நா.தனுஜா)

பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற வயோதிபரொருவர் திடீரென்று மரணமடைந்ததாகவும் அதற்கான காரணம் தற்போதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில், பாணந்துறை பெக்கேகம வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்த 82 வயதான மினுவம்பிட்டிய காமினி பீரிஸ் என்ற வயோதிபரே காலை 8.40 மணியளவில் இவ்வாறு மரணமடைந்திருக்கிறார். இவர் பாணந்துறை பெக்கேகம, அம்பலாந்துவ பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவ்வயோதிபர் தனது இல்லத்திலிருந்து புறப்படுகையில் இருதயவலிக்கு உள்ளாகியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறியிருக்கின்ற போதிலும், இன்னமும் அவரின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.