எஸ்.எஃப் லொக்கா அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அனுராதபுரத்தில் உள்ள தஹியாகம சந்தியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பலம் இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எப் லொக்கா என்ற எரோன் ரணசிங்கவே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் எஸ்.எப் லொக்காவின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.