9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றுவருகின்ற நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சின் தலைவரும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க இன்று மதியம் கொழும்பு பல்கலைக்கழக இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் இன்று காலை 10 மணிவரையான காலப்பகுதியில் 27 வீதமான வாக்களிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.