கூட்டமைப்பின் வெற்றி உறுதி - ரவிகரன்

05 Aug, 2020 | 11:20 AM
image

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கைச் செலுத்தியபின்னர் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,

இத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும் என நம்புகின்றேன்.

அத்தோடு வளமைக்குமாறாக இம்முறைத் தேர்தலில், அதிகளவான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக சில வாக்குச் சாவடிகளை அண்டிய பகுதிகளில் இராணுவச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுக் காணப்படுவதுடன், இராணுவத்தினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இங்குள்ள மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய அதிக பாதுகாப்பை தவிர்த்து, மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூடிய நிலையினை ஏற்படுத்தியிருக்கலாம்.

இருப்பினும் எமது மக்கள் அதிகளவில் வாக்களிக்கச் செல்வார்கள் என நம்புகின்றேன்.

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றி நிச்சயம் என்பதை மிக உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44