லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் காரணமாக அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்வாறெனினும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து இலங்கை தூதரகம் 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

எனினும் இந்த வெடிப்புக் காரணமாக இலங்கைப் பிரஜையொருவர் காயமடைந்துள்ளார்.

இதனிடையே வெடி விபத்தில் லெபனானில் உள்ள பெல்ஜிய தூதரக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், அதன் இரண்டு ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்துள்ளதாக பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் பிலிப் கோஃபின் தெரிவித்துள்ளார்.