தமிழர்கள் கசப்பான விடயங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் - சாள்ஸ் நிர்மலநாதன்

05 Aug, 2020 | 11:09 AM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு  ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம் பெற்று   வருகின்றது.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை 8.55 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன் வாக்களித்தார்.

வக்களித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இடம் பெற்றுக்கொண்டு இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழர்களின் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழித்து சிங்கள பிரதி நிதித்துவத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தை இல்லாது செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்கள் கசப்பான விடையங்களை மறந்து வாக்களிக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27