9 ஆவது பாராளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் வவுனியாவில் இன்றுகாலை 7 மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாகவும், சுமூகமாகவும் இடம்பெற்று வருகின்றது. 

வாக்களிப்பில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தமது வாக்கை செலுத்திவருவதுடன், முன்னாள் பிரதிஅமைச்சர்  காதர் மஸ்தான் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முதல் நபராக தனது வாக்கை அளித்தார்.  

இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளில் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.