2020 பாராளுமன்றத் தேர்தல், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல வாக்களிப்பு நிலையங்களிலும் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் இன்று காலை 07.00 மணி முதல் இடம் பெற்று வருகிறது.

வாக்களிப்பானது சுகாதார நடை முறைகளை பின்பற்றியவாறு வாக்களிப்பு இடம் பெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக தம்பலகாமம் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்திலும் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.