ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு செயற்பாடுகள் காலை 7.00மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி மக்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதை காணமுடிகிறது.

காலையிலேயே  மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சமூக இடைவெளி யினை பேணி  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாக்களிக்கின்றனர்  

யாழ் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் எந்தவிதமான அச்சமும் இன்றி  கட்டுப்பாடுகளுமின்றி மக்கள் சுதந்திரமாக  வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.